தாருல் உலூம் மொயினுல் இஸ்லாம் மவுலானா ஸாத் குறித்து

தாருல் உலூம் மொயினுல் இஸ்லாம், சிட்டகாங், மவுலானா ஸாத் அவர்களின் வழிகேடு தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டு, தாருல் உலூம் தியோபந்தின் ஃபத்வாவிற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளது


முஃப்தி அஹ்மத் ஷஃபி
முஹ்தமிம் (முதல்வர்)
அல்-ஜாமிஅதுல் அஹ்லியா தாருல் உலூம் மொயினுல் இஸ்லாம் ஹத்தாழாரி, சிட்டகாங், வங்காளதேசம்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
நீங்கள் மார்க்கச் செயல்பாடுகளில் மும்முரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அல்லாஹ் சுவ. தஆலா உங்கள் அனைத்து முயற்சிகளையும் ஏற்றுக்கொள்வானாக. வங்காளதேச உலமாக்கள் தாருல் உலூம் தியோபந்தின் ஃபத்வாவை ஒப்புக்கொண்டு ஆதரிக்கின்றனர். மவ்ல்வி ஸாத் தமது நிலைப்பாட்டை மாற்றாத வரை, அவரது வங்காளதேச வருகை நமது தீனுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இதனால் உலமாக்களுக்கும் தப்லீக் ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, இந்த ஆண்டு இஜ்திமாவில் (ஜனவரி 2017) மவ்ல்வி ஸாத்தை நாம் ஈடுபடுத்தாமல் இருப்பதே நல்லது என்று நான் கருதுகிறேன். தப்லீகின் மதிப்புமிக்க முயற்சியைப் பாதுகாக்க இந்தப் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.